காயார் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

திருப்போரூர்: விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன், விஐடியின் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன்,  ஜி.வி.செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்பேரில், செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விஐடி சென்னையின் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதன், துவக்க விழாவில், தலைமை விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மாவட்ட அலுவலர்  சையது முகமதுஷா கலந்துகொண்டு முகாமினை துவங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக காயார் கிராமத்தின் ஊராட்சி தலைவர் ரமேஷ், விஐடி சென்னை இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த முகாம், நேற்று துவங்கி, வரும் 2.4.2023 வரை நடைபெற உள்ளது. இதில், விஐடி சென்னையை சேர்ந்த 125 நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள், காயார் கிராமத்தில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், மரம் நடுதல், மருத்துவ முகாம் நடத்துதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஜெ.பாலமுருகன், அலுவலர்கள் எம்.எம்.பாலமுரளி, ஏ.புவனேஸ்வரி ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories: