742 பேரும் ஒரே மையத்தில் தேர்வு எழுதவில்லை: பயிற்சி மைய நிர்வாகி விளக்கம்

சென்னை: தங்களது பிரமிடு ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்த 4,000 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் என பயிற்சி மைய நிர்வாகி தெரிவித்துள்ளார். 4,000 பேர் தேர்வு எழுதியதில் 742 பேர் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 742 பேரும் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் இல்லை என்று பயிற்சி மைய நிர்வாகி கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். காரைக்குடி தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 302 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எஞ்சிய 440 மாணவர்கள் காரைக்குடியில் படித்தாலும் வெவ்வேறு மாவட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. மட்டுமின்றி ரயில்வே, டெட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளுக்கும் தங்களது அகாடமி பயிற்சி அளிக்கிறது எனவும் வழக்கமான பயிற்சியை தாண்டி மாணவர்களுக்கு நில அளவையர் பணிக்கான செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன எனவும் பயிற்சி மைய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Related Stories: