ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகள் கலைப்பு: புதியமாவட்ட தலைவராக தரணி. R. முருகேசன் நியமனம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்:

இராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி. R. முருகேசன் என்பவரை புதிய மாவட்டதலைவராக நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: