மாமல்லபுரம் அருகே டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நலச்சங்க 5ம் ஆண்டு விழா

திருப்போரூர்: தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 5ம் ஆண்டு விழா நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு சங்கத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பொருளாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் வரவேற்றார். துணை தலைவர்கள் கார்த்திக், அன்பு, சுந்தரம், கணேசன், முருகன், லட்சுமணன், நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு மணல் லாரி சங்க தலைவர் யுவராஜ், தமிழ்நாடு மணல் லாரி சங்க சம்மேளன தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

பின்னர் நடைபெற்ற சங்க பொதுக்குழுக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அதிக மணல் தேவையை கருத்தில் கொண்டு ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். அதிக பாரம் ஏற்றப்படுவதாக கூறி அபராதம் வசூலிக்கும் நடைமுறையை நீக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் இயங்கும் காலாவதியான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மறைந்த சங்கத்தின் கவுரவத் தலைவர் நந்தகோபால் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.

Related Stories: