குஜராத்தில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட மாபியா கும்பல் தலைவன்

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநில மாபியா கும்பலின் தலைவனான அதிக் அகமது என்பவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக மாபியா கும்பல் தலைவனாக இருந்த அவர் மீது, பல மாநிலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. குஜராத் மாநிலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, மற்றொரு வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக உத்தரபிரதேசம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அதையடுத்து நேற்று குஜராத் சென்ற உத்தரபிரதேச போலீசார், நீதிமன்ற ஆவணங்களை சிறைத்துறையினரிடம் சமர்பித்தனர். பின்னர் அதிக் அகமது பலத்த பாதுகாப்புடன் குஜராத்தில் இருந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் வழியாக உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிக்கு இன்று காலை அதிக் அகமது அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நைனி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அதிக் அகமது, உமேஷ் பால் என்பவர் கடத்தல் வழக்கில் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Related Stories: