கத்தியால் சரமாரி குத்தி தொழிலாளி கொலை: போதையில் மகன் வெறிச்செயல்

விழுப்புரம்: குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மூத்த மகன் சுப்ரமணி (40). திருமணமாகி விட்டது. குடும்ப பிரச்னை காரணமாக இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வேலைக்கும் செல்வதில்லையாம். இதனை தந்தை கண்டித்த நிலையில் அவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனிடையே நேற்று இரவு முதல் குடிபோதையில் இருந்து வந்த சுப்ரமணி இன்று காலை மீண்டும் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தையை தலை, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சுப்ரமணியை மடக்கிப்பிடித்து வளத்தி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்ரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: