அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி சசிகலா கூறியதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன்: ஓபிஎஸ் பேட்டி

குத்தாலம்: மயிலாடுதுறை  மாவட்டம், குத்தாலத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: அதிமுகவினர்  அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று  சசிகலா கூறியதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும்  ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம். சாதாரண தொண்டர்கள் கூட பதவிக்கு  போட்டியிடலாம். ஆனால் அவர்கள் 10 மாவட்ட செயலாளர்  முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு  போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

அதைத்தான்  கூடாது என்கிறோம். கட்சி சட்ட விதிப்படி 5 ஆண்டுக்கு ஒருமுறை  புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும், பழைய உறுப்பினர்களை  புதுப்பிக்கவும் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட வேண்டும் சட்ட  விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர் அட்டைகள் வழங்கி அவர்களை வைத்து தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: