வைகை கரையில் அமைந்துள்ள 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள்: அமைச்சர் தகவல்

மதுரை: வைகை நதிக்கரையில் 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் உள்ளன என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மதுரை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, நூலகத்துறை சார்பில் ‘வைகை இலக்கியத் திருவிழா’ மதுரை உலக தமிழ்ச்சங்க கூட்டரங்கில் நேற்று துவங்கியது.  அமைச்சர்கள் பி.மூர்த்தி,  பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சங்க காலத்தில் பெருமை வாய்ந்ததாக வைகை நதி பேசப்படுகிறது. வைகையின் சிறப்புகளை எடுத்துச் சொன்னது இலக்கியவாதிகளும் அவர்களது படைப்புகளும்தான்.

அதனால்தான் வைகை இலக்கிய விழாவாக நடத்துகிறோம். 256 கி.மீ நீளமுள்ள வைகை நதிக்கரையில் அமைந்துள்ள 350 கிராமங்களில் சுமார் 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் இருக்கிறது. இதனை பார்க்கும் போது வைகை நதிக்கரையோரம் என்பது அறிவியல் மூலமாக நிரூபிக்கக்கூடிய ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழனும்தான் என்பதை பறைசாற்றுகின்ற வகையில் விளங்குகிறது. இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் போற்றக்கூடிய வகையில் இலக்கிய விழாவினை நடத்திக்கொண்டு வருகிறோம் என்றார்.

Related Stories: