திருமணம் செய்யாமல் காதலியை ஏமாற்றிய காவலர் சஸ்பெண்ட்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. ஆயுதப்படை காவலர். இவரும் அதே ஊரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணும் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளும்படி இளையராஜாவிடம், அந்த இளம்பெண் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், இளம்பெண்ணுக்கு இளையராஜா கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். இதையடுத்து இளையராஜா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி தங்கதுரை நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: