ரயில் மோதி வாலிபர் பலி

தாம்பரம்: கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா (28). இவர், சென்னையில் உள்ள தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்குச் சென்று இரவு ரயில் மூலம் வீடு திரும்பிய அவர், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவர் செல்போனில் பேசியபடி நடந்துள்ளார்.  அப்போது, எழும்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஆதித்யா தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆதித்யாவின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: