சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி 11வது பட்டமளிப்பு விழா

சென்னை: மேற்கு தாம்பரம் சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ள லியோமுத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர், உறவினர்கள் உள்பட சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.  சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை வகித்தார். முதல்வர் மு.பழனிக்குமார் வரவேற்று, கல்வி அறிக்கையை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கப் பலகைகள் முதலிடம்  மற்றும் பல்வேறு திறமைகளில் சிறந்த பரிசுகளை வென்ற 15 மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது. இளநிலை, 558 மற்றும் முதுநிலை 67 என மொத்தம் 625  பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். 2023 சர்வதேச தலைவர் சம்பத்குமார் வீரராகவன் (ஐஇஇஇ-ஹெச்கேஎன்) பேசுகையில், ‘‘உலகில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தி ஒரு பன்முகதன்மைக் கொண்ட பொறியாளராக மற்றும் தலைவராக மாற வேண்டும் என்பது உங்கள் கைகளில். இந்த கல்வி நிறுவனம் ஒரு மிகச்சிறந்த நிறுவனம். இது ஒட்டுமொத்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நிறுவனம். இந்நிறுவனத்தில் படித்த நீங்கள் எளிதாக வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் உங்களை தயார் செய்துகொண்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் உலகத்தை எளிதாக இயக்கமுடியும்’’ என்றார்.

திருச்சி ஐஐடி இயக்குநர் டி.ஆர்.நரசிம்ம சர்மா என்விஎஸ் பேசுகையில், ‘‘மாணவர்கள் சவால்களை ஏற்றுக்கொண்டு, பிரச்னைக்கு ஏற்றவாறு தங்களது திறன்கள் மூலம் ஒரு திறமையான முடிவை எடுத்தால் அது உங்களின் வாழ்கையிலும் மற்றும் தொழில் துறையிலும் நல்லதொரு முன்னேற்றத்தை அளிக்கும்.  பொறியியல் பட்டதாரிகளான நீங்கள் வேலையை மட்டும் நம்பி இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும்’’ என்றார்.  விழாவில் கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் சு.சதீஷ்குமார், பி.பாலசுப்பிரமணியன், முதன்மை தகவல் அதிகாரி மு.நரேஷ்ராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். அகாடமிக்ஸ் டீன் ராஜராஜன் நன்றி கூறினார்.

Related Stories: