முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோவளம் கடற்கரையில் இன்று படகு போட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவளம் கடற்கரையில் படகு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ெதாடங்கி வைக்கிறார். இதுகுறித்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,  அமைச்சருமான தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்  தமிழ்நாடு முதல்வரும்,  திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி திருப்போரூர் வடக்கு ஒன்றியம், கோவளம் கடற்கரையில்  இன்று (26ம் தேதி) மாலை 3 மணியளவில் மாபெரும் படகு போட்டி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன்  விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.     திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், திருப்போரூர் ஒன்றிய குழுத் தலைவருமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் வரவேற்கிறார்.  மாவட்ட அவைத்தலைவர் த.துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, து.மூர்த்தி மற்றும் மாவட்ட  பொருளாளர் வெ.விசுவநாதன் முன்னிலை வகிக்கின்றனர். திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான  உதயநிதி ஸ்டாலின் மாபெரும் படகு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் அவர் படகு போட்டிகளில் வெற்றி பெற்ற மீனவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.  திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், தலைமை தீர்மானக் குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ.தமிழ்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புச்செல்வன், ஆதிமாறன், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி துர்கேஷ்,  தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ்,

பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், எஸ்.சேகர், த.ஜெயகுமார், வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், எஸ்.இந்திரன், ஏ.கே.கருணாகரன், இ.எஸ்.பெர்னாட், செம்பாக்கம் சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், ஒன்றியச் செயலாளர்கள் ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, வண்டலூர் வி.எஸ்.ஆராமுதன், பையனூர் எம்.சேகர், ஏ.வந்தேமாதரம், மூவரசம்பட்டு ரவி, ஆப்பூர் பி.சந்தானம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்கின்றனர்.  முடிவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் மற்றும் கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா சுந்தர் தங்கம் நன்றி கூறுகின்றனர்.

* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Related Stories: