நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூர்மண்டபம் மெயின் ரோட்டில் வசிப்பவர் குருமூர்த்தி(66). இவரது மனைவி கலைச்செல்வி. குருமூர்த்தி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நோய்வாய்ப்பட்ட குருமூர்த்தி தஞ்சையில் உள்ள மூத்த மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மனைவி கலைச்செல்வி புதுக்கோட்டையில் உள்ள இளைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தஞ்சையில் இருந்து நேற்று காலை திரும்பிய குருமூர்த்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 100 பவுன் நகை, ரூ.3 லட்சம் போயிருந்தது. இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
