பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளாளபுரம் பஞ்சாயத்து முனியம்பட்டி சன்னியாசிகடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் உரிமம் பெற்று பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள நிலத்தில் குடோன் அமைத்து, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த குடோனில் அமுதா(45), வேடப்பன்(75) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர்.

2 நாட்களுக்கு முன்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி, அமுதா இறந்தார். வேடப்பன் உடல் கருகி படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் வேடப்பன் இறந்தார்.  இதனிடையே கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: