குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

குன்னூர்: குன்னூரில் மலைபாதையில் சுற்றிய காட்டுயானைகள்  வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட நிலையில் மீண்டும் ரன்னி மேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ளன.சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக  உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் குன்னூர் நகர் நோக்கி படையெடுத்துள்ளன. குன்னூர் மலைப்பாதையில் கடந்த 5 நாட்களாக  குட்டி உட்பட 3 காட்டு யானைகள் உலா வருகின்றன.

மலைபாதையில் சுற்றித் திரிந்த காட்டுயானைகளை நேற்று வனத்துறையினர் பல கிலோ மீட்டர் தூரம் துரத்தி வனப்பகுதியில் விரட்டி விட்ட நிலையில் மீண்டும் ரன்னி மேடு நிலையத்திற்குள் வந்தது. காட்டுயானைகள் ஆக்ரோசமாக காணப்பட்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் காட்டுயானைகளை ரயில்பாதைக்கு விரட்டினர். மீண்டும் ரயில் நிலையத்திற்கு காட்டு யானை வரும் என்பதால் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

Related Stories: