புதிய இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது

சென்னை: புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச வாங்கியவர்களை ஊழல் தடுப்புபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கேசவராஜகுப்பம் கிராமம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், புதிதாக கட்டும் தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த மாதம் 24ம் தேதி இ-சேவை மையத்தில் சம்மந்தப்பட்ட ஆவணங்களை இணைத்து மனு பதிவு செய்துள்ளார். பின்னர், இதுதொடர்பாக  கடந்த 1ம் தேதி பொதட்டூர்பேட்ைட மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று புதிய மின்இணைப்பு குறித்து அங்கு இருந்த வணிக ஆய்வாளர் கணபதியிடம் கேட்டுள்ளார்.

அதன்பேரில், மனுதாரர் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த வணி ஆய்வாளர், அதன்பிறகு எந்த தகவலும் சொல்லாததால் கடந்த 6ம் தேதி மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.5,086 அரசு கட்டணமாக செலுத்தும்படி கூறியுள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி அரசு கட்டணம் ரூ.5,086 யை ெசலுத்திய பிறகும் வீட்டிற்கு மின்இணைப்பு கொடுக்கவில்லை.

இதையடுத்து நேற்று வணிக ஆய்வாளர் கணபதிக்கு போன் செய்து, அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டேன். ஆனால் இன்னும் புதிய மின் இணைப்பு தரவில்லை என்று கேட்டதற்கு, ரூ.2000 லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். அவர்கள், ரூ.2000 பணத்தை கொடுத்து, அதை வணிக ஆய்வாளரிடம் கொடுக்கும்படி அனுப்பியுள்ளனர். அதை, வணிக ஆய்வாளர் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.25,610 பணம் கைப்பற்றப்பட்டது. அதைப்போன்று கடலூர் மாவட்டத்தில், பட்டா மாற்றம் செய்யக்கோரி இ-சேவை மையத்தில் விண்ணப்பத்து பண்ணப்பட்டு கிராம் நிர்வாக அதிகாரியை அணுகிய போது ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார்.  இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஜெயங்ெகாண்டத்தில், அரசு ஒப்பந்தத்தில் செய்த வேலைக்கான பில்லை பாஸ் செய்வதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்ற உதவி செயற்பொறியாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு உடந்தையாக செயல்பட்ட தனிநபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: