ராகுல் எம்பி பதவி பறிப்பு காங்கிரஸ் கட்சியினர் 2வது நாளாக போராட்டம்

சென்னை: ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 2வது நாளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.  இதையடுத்து, அவரது எம்பி பதவியை மக்களவை செயலகம் பறித்து உள்ளது. இதை  கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று 2வது நாளாக காங்கிரஸ் கட்சியினர்  மறியல், ஆர்ப்பாடம் நடத்தினர்.

நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு, சோளிங்கர் பஸ் நிலையம் அருகே, பேரணாம்பட்டு காவல் நிலையம் முன்பு, திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே, சிவகங்கை ரயில் நிலையம், ஒட்டன்சத்திரம், மன்னார்குடி தலைமை தபால் நிலையம் அருகில், திருச்சி  சிங்காரத்தோப்பில் உள்ள அருணாசலம் மன்றம் முன்பு உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதேபோல், புதுச்சேரியில் ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சந்திப்பில் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடந்தது.

Related Stories: