ரூ.63.72 லட்சம் மோசடி 6 பேருக்கு 10 ஆண்டு சிறை

கோவை: கோவை ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நம்பி பலர், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்காமல் 63.72 லட்சம் ரூபாய் மோசடி செய்தது  தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரம் சிவக்குமார் (41), முருகேசன், லட்சுமி (32), தீபா (34), விமலா (38), பிரியா (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், லட்சுமி உள்பட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 72 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

Related Stories: