நூறு நாள் வேலை திட்ட கூலி அதிகரிக்கப்படுமா?

சென்னை: சட்டப்பேரவை பட்ஜெட் விவாதத்தில் வேப்பனஹள்ளி உறுப்பினர் கே.பி.முனுசாமி (அதிமுக) பேசுகையில், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், கூலித் தொகையும் ரூ.300 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கூறியதை எப்போது  நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: ஒன்றிய அரசு இந்த திட்டத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதைக் குறைத்து, 24 கோடி மனிதத் திறன் வேலை நாட்களை தமிழகத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. இது வளர்ச்சியடைந்த மாநிலம். பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து, தமிழ்நாட்டுக்கு கடந்த முறை, 25 லட்சத்தை தாண்டவில்லை. 25 கோடி என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியிருந்தாலும், நாங்கள் அதை எதிர்பார்க்காமல், 32 கோடி அளவிற்கு மனித திறன் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை 40 கோடி வேலைத் திறன் நாளாக உயர்த்துவோம். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், 100  நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: