அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி

ஆவடி: திருநின்றவூர், கெங்கி ரெட்டி குப்பம், எம். ஜி. ஆர். நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா (25). இவரது நண்பரான பெரம்பூர், அகரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (30) மற்றும் யமுனா (26) இருவரும் கடந்த 2019 முதல், ஷர்மிளா தம்பிக்கு (23) அரசு வேலை வாங்கித் தருவதாக  ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்காக ரூ.18 லட்சம் பெற்று கொண்டார். பணத்தைக் கேட்டபோது திரும்பித் தர மறுத்துள்ளனர். திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, கார்த்திகேயன் மற்றும் யமுனா இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: