பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா வினாத்தாள் அச்சிட ரூ.9 கோடி ஒதுக்கீடு

சென்னை: 2022-23ம் ஆண்டில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக வினாடி வினா நடத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான ஏ4 பேப்பர் வாங்குவதற்கு கல்வித்துறை நிதி ஒதுக்கி இருக்கிறது. இதற்காக கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) தளத்தில் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையான அளவில் பேப்பர்கள் வாங்குவதற்கு ஏற்றவாறு அதற்கான நிதியை கணக்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தம் ரூ.9 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரத்து 740 ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்துக்கு 54 லட்சத்து 13,892 ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories: