தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு

கோவில்பட்டி: பாஜக இனி கூண்டுக்குள் இருந்து பறக்கும் நேரம் வந்துவிட்டது என கோவில்பட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். கோவில்பட்டியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் உரையாற்றிய, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது; பாஜக தமிழ்நாட்டில் நேர்மையான புதிய பாதையில் பயணம் செய்ய நாம் தயாராக வேண்டும். மோடியின் சாதனைகளை வைத்து ஓட்டு கேட்க வேண்டும், எந்த தமிழரும் வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஒரு கிளி 30 ஆண்டுகளாக கூண்டிற்குள்ளேயே இருக்குமா? அந்தக் கிளியை திறந்துவிட்டு, பாஜக வந்துவிட்டது, வளர்ந்துவிட்டது என்று கூறினால், அந்தக் கிளி யோசிக்கும். 30 ஆண்டுகளாக இந்த கூண்டிற்குள்தான் நான் இருக்கேன். திடீரென வந்து கூண்டை திறந்துவிட்டு என்னை பறந்துபோகச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று அந்தக் கிளி கேட்கும். இதுபோலத்தான் இப்போது தமிழகத்தில் ஆக்ரோஷமாக சில உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கிளியால் பறக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கூண்டு இப்போது திறக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அந்தக் கிளியும் பறக்கத் தயாராக இருக்கும் என்று நம்புகிறேன். எல்லா இடத்திலும் களம் மாறிவிட்டது என்பதை நாம் உணர்ந்துவிட்டோம். தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. அது ரோட்டில் நடந்துசெல்லும் சாமானிய மனிதனின் கண்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. பெண்கள் உட்பட யாரைப் பார்த்தாலும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக தமிழகத்திலும் களம் மாறி அந்த நம்பிக்கை இங்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories: