புதுமாப்பிளை கொலை கோர்ட்டில் 2 பேர் சரண்

சேலம்: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், அவதானப்பட்டியை அடுத்த முழுக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் (43) என்பவரது மகள் சரண்யாவை (21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் ஜெகனை வெட்டி கொலை செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இநத வழக்கில் நாகராஜ் (21),  முரளி (20) ஆகியோர் நேற்று சேலம் ஜே.எம். 4 கோர்ட்டில் சரண் அடைந்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: