மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவு: நிதியமைச்சர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் பின்வருமாறு:

விஜயதாரணி (விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்): மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு ஏழை மக்கள் சார்பாக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாகை மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்): தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என்பது தனிமனிதருக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாகும்.

ரவி - (அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்): தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான திட்டம் ஒன்றும் இல்லை.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஊரக வளர்ச்சி துறையில் செயல்பட்டு வந்த ஜல் ஜீவன் மிஷன் மேலாண்மை காரணங்களுக்காக மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டது. நிர்வாக ரீதியான மாற்றம் இது. அதன்படி இந்தாண்டுக்கு ஒப்பிட்டு பார்க்கக்கூடிய தொகை ரூ.29,161 கோடி, அதன்படி, 2023-24 நிதிநிலை அறிக்கையில் 9.4 சதவீதம் கடந்தாண்டை விட அதிகமாக ஊரக வளர்ச்சித்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிட நலத்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இந்தாண்டு முதல் ஒன்றிய அரசே நேரடியாக வழங்குவதால் ரூ.893 கோடி பட்ஜெட்டில் குறைவாக வந்துள்ளது. அந்த பணம் இதில் சேர்ந்திருந்தால் இந்தாண்டு ரூ.4352 கோடியாக இருந்திருக்கும். இதுசென்ற ஆண்டை விட குறைவான தொகை ஒதுக்கப்படவில்லை.

ரவி - (அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்):டாஸ்மார்க் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்தாண்டு 25 சதவீத குடிமக்களை அதிகமாகி உள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கடந்த காலங்களில் கொரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காரணமாக மது நுகர்வோர் எண்ணிக்கை வீழ்ச்சியாக இருந்தது. தற்பொதும், மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளதே தவிர அதிகமாகவில்லை.

Related Stories: