திருட்டு பைக்கில் சாகசம் பிரபல பைக் திருடர்கள் சிக்கினர்: இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு

சென்னை: திருட்டு பைக்கில் சாகசம் செய்து, அதை இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்த பிரபல பைக் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 1வது ெதருவை சேர்ந்தவர் சீனிவாசன் (26). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்த விலை உயர்ந்த பைக் மாயமானது. இதுகுறித்து சீனிவாசன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் திருடப்பட்ட பைக்கில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்யும் வீடியோ காட்சிகள் இருந்தது. இதை கவனித்த சீனிவாசன் இதுகுறித்து போலீசார் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகவரியை வைத்து விசாரணை நடத்திய போது, ஓட்டேரி பிரிக்ளின் சாலையை சேர்ந்த பாலா (எ) பாலமுருகன் (18) என தெரியவந்தது.  உடனே போலீசார் பாலாவை பிடித்து விசாரணை நடத்திய போது, பாலா, தனது நண்பர் சூளை வி.வி.கோயில் தெருவை சேர்ந்த சோமேஷ் (21) என்பவருடன் இணைந்து, ஓட்ேடரி, அயனாவரம், டி.பி.சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்திப்பட்டிருந்த விலை உயர்ந்த பைக்குகளை திருடியது தெரியவந்தது.

மேலும், திருடிய பைக்குகளை ‘ஓஎல்எக்ஸ்’ இணையதளத்தில் பைக் விற்பனை என்று புகைப்படத்துடன் பதிவு செய்து, அதன் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. சோமேஷ் திருட்டு பைக்கிற்கு ஆர்சி புத்தகத்தை யாருக்கும் சந்தேகம் வராதபடி போலியாக தயாரித்து அதன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் பிரபல பைக் திருடர்களான பாலா, சோமேஷ் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: