முதியவரை தாக்கி செல்போன், நகை பறித்த வாலிபர் கைது: மற்றொருவர் தலைமறைவு

ஆவடி: திருமுல்லைவாயலில் ஒரு வருடத்திற்கு முன்பு முதியவரை தாக்கி செல்போன் மற்றும் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், குளக்கரை பகுதியில் வசிப்பவர் சந்திரன் (85).  சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சந்திரலேகா, கடந்த வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே,  தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு 12ம் தேதி 9. 45 மணி அளவில் சந்திரன் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் அத்துமீறி திடீரென  நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், இவரை கட்டி போட்டு, அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும்  அணிந்திருந்த அரை சவரன் மோதிரத்தையும் திருடி சென்றனர்.

இது குறித்த, புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தும் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்,  திருமலை நகரைச் சேர்ந்த விக்னேஷ் (22) என தெரிய வந்தது. இந்நிலையில், மோரை ஏரி கரையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய  தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் மாலை அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரையும்  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: