மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

பூந்தமல்லி: சென்னை மீஞ்சூரில் இருந்து குன்றத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் கட்டுமான பணிக்காக சிமெண்ட் ஆஷ் கலவையை ராட்சத கலவை இயந்திர லாரியில் ஏற்றிக்கொண்டு ராஜேஸ் (36) என்பவர் நேற்று காலை ஓட்டி வந்தார். சென்னை மதுரவாயல் பைபாஸ் வழியாக அடையாளம்பட்டு அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராஜேஷுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் லாரியை ஓட்டி வந்த போது தூங்கியதால் சாலையோர தடுப்புகளில் மோதியதில் லாரியின் டயர் வெடித்து லாரி கவிழ்ந்துள்ளது. மேலும் லாரி சாலை ஓரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. லாரியை மீட்க ராட்சத கிரேன் வருவதற்கு தாமதமானதால் சுமார் 7 மணி நேரம் சாலையோரத்தில் கவிழ்ந்தபடி லாரி கிடந்தது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: