போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்

சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி இரவு நேரங்களில் வாகன தணிக்கை நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை நடந்தது.  குறிப்பாக அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி 100 அடி சாலை, அண்ணாநகர் என முக்கிய சாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை நடந்தது. இரவு முழுவதும் நடந்த தணிக்கையில் மொத்தம் 7,195 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 84 நபர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 81 பைக்குகள், 2 ஆட்டோ, ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இன்றி இயக்கியது. விதிகளை மீறியதாக 58 வாகனங்கள் சிக்கியது. மேலும், போலீசாரின் ஆய்வில் பதிவு எண்கள் இல்லாத 3 வாகனங்கள் என, நேற்று முன்தினம் மொத்தம் 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: