மெரினா கடற்கரையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் சிக்கினர்

சென்னை: மெரினா கடற்கரை மற்றும் பெரியமேடு பகுதியில் கஞ்சா விற்ற, வடமாநில வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில், ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசார் கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. அந்த வகையில் மெரினா கடற்கரை  நேதாஜி சிலை அருகே, போலீசார் நேற்று முன்தினம் கண்காணித்த போது, வாலிபர் ஒருவர் பையில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மெரினா போலீசாரின் சோதனையில், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா இருந்தது. அவனிடம் நடத்தி விசாரணையில், ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த விற்பனை செய்வது வழக்காம். அதைதொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேபானந்த் ராவத்(24) என்பவரை கைது செய்தனர். அதேபோல், பெரியமேடு அல்லிக்குளம் லிங்க் சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் புழல் காவாங்கரை சாந்தினி அவென்யூ பகுதியை சேர்ந்த பிரதீப் கணேஷ்(எ) முகமது (34) என தெரியவந்தது. போலீசார் பிரதீப் கணேசையும் கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: