கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவல் 0.7%-லிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 1000ஐ தாண்டி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியில், கொரோனா தொடர்பான நிலைமை மற்றும் பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ய பிரதமர் மோடி உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் தொங்கியது. இந்த கூட்டத்தில், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: