நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் 0.7%-லிருந்து 1.9%ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 7,026 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடக ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  அதிகாரித்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உயர்மட்டக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார்.

தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்து, படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

அதன் அடிப்படையில்  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,821,011 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,688,202 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,643,518 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 40,110 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Related Stories: