கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறை: செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக கூட்டுறவுத்துறையில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறை கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வழிகளில் பலன் அடைய முடியும்.

குறிப்பாக, தனியார் வங்கிகள் மற்றும் இதர வங்கிகளுக்கு செல்லும் மக்கள் எளிதில் வீட்டின் அருகே இருக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு செல்வார்கள். டிஜிட்டல் முறைகளை பற்றி அறியாதவர்களுக்காக மல்டி சர்வீஸ் சேவைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறை கூட்டுறவு வங்கிகளில் கொண்டுவரப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Related Stories: