திருப்பதி அருகே ₹98 லட்சம் மதிப்புள்ள 25 உயர் ரக செம்மரக் கட்டைகளை கடத்திய ஒருவர் கைது-தப்பிச்சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை

ஸ்ரீகாளஹஸ்தி : திருப்பதி அருகே ₹98 லட்சம் மதிப்புள்ள 25 உயர் ரக செம்மரக் கட்டைகளை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்ததையடுத்து, தப்பிச்சென்ற மர்ம நபருக்கு போலீசார் தேடி வருகின்றனர். திருப்பதி மாவட்டம் புத்தூர் பிரிவு நாராயணவனம் காவல் நிலையப் பகுதியில் நேற்று எஸ்ஐ மற்றும் போலீசாருடன் வாகனங்களைச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக புத்தூரில் இருந்து நாராயணவனத்தை நோக்கி சொகுசு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது போலீசாரை பார்த்த கார் ஓட்டுனர் மிக வேகமாக செல்ல முயற்சித்தார்.

உடனடியாக அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்துடன் ஒருவரை கைது செய்து, காரில் இருந்த ₹98 லட்சம் மதிப்புள்ள உயர்ந்த ரக 25 செம்மரக் கட்டைகளுடன், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தில் இருந்த ஒருவர் தப்பித்து செல்ல முயற்சி செய்தவரை கைது செய்து விசாரணை செய்ததில், தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் கணேசன் நகரை சேர்ந்த வேலு சாமியின் மகன் மருதுபாண்டி வெள்ளைசாமி(44) என்பது தெரியவந்தது.

மேலும் தப்பிச் சென்றவர் ஷேஷாசலம் வனப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை கூலி ஆட்களை வைத்து வெட்டி  அவற்றை பெங்களூரு, சென்னையில் உள்ள கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பிடிபட்ட ஓட்டுநர் மருது பாண்டி வெள்ளைச்சாமி  விசாரணையில் கூறினான். இதையடுத்து தப்பித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: