விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று

சென்னை: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை,  மற்றும் சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு, (ஐஎஸ்ஓ  21001:2018) கல்வி சார்ந்த சர்வதேச தர மேலாண்மை மறு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தர கட்டுப்பாட்டு அமைப்பால் (QCI) அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் டியூவி-எஸ்யூடி அமைப்பானது, கடந்த 2019ம் ஆண்டே அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் தரத்தை ஆராய்ந்து, சர்வதேச தரநிலை மேலாண்மை சான்றிதழை வழங்கியது. தொடர்ந்து மறு சான்றிதழுக்கான ஆராய்வும் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இம்மறு சான்றிதழை பெற்ற முதல் கல்வி நிறுவனம் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையே. இது குறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ‘இந்தியாவிலேயே இச்சான்றிதழை பெற்ற முதல் நிறுவனம் எங்களுடையதே,’ என்றார். இதன் மூலம் சிறந்த கல்வியை  வழங்குவதிலும், மாணவர்கள் நலனை மேம்படுத்துவதிலும், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகள் சிறந்து விளங்குகிறது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தரச்சான்று பெறுவதற்கு செயலாற்றி வரும் துறையின் டீனுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டை தெரிவித்தனர்.        

Related Stories: