ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: பெரம்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையில் ஒன்றிய அரசின் தவறான செயல்பாடுகளை கண்டித்து, அவ்வப்போது ரயில்வே தொழிற்சங்கத்தினர் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் எஸ்.ஆர்.இ.எஸ். - என்.எப்.ஐ.ஆர் தொழிற்சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ரயில்வே பணிமனைகளில் பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் நேற்று முன்தினம் பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன்பு பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் கருணாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோன்று நேற்று காலை பெரம்பூர் லோகோ பணிமனை முன்பு, லோகோ மெக்கானிக்கல் கிளை செயலாளர் தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த 2 ஆர்ப்பாட்டங்களிலும் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தின் மத்திய சங்க நிர்வாகத் தலைவர் சூரியபிரகாஷ், இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: