பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் 40 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரை சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய டிரைவரை போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில், கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பட்டினப்பாக்கம் கடற்கரை சர்வீஸ் சாலையில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவில் போலீசார் சோதனை செய்த போது, அதில் பண்டல் பண்டலாக 40 கிலோ கஞ்சா இருந்தது.

உடனே போலீசார் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், செங்குன்றம் காவாங்கரை லூர்து மாதா கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (55) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, பிறகு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வந்தது ெதரியவந்தது. இவர் மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து செல்வத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ெசல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: