பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதி

சென்னை: தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களைப் போலவும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைப் போலவும், முன்னோடி ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த, இப்பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும். இத்தொகைக்கு நிகராக தனியார், நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து பங்களிப்பு தொகையை ஈர்த்து, அத்தொகையை அப்படியே சேமித்து வைத்து, கிடைக்கும் வட்டியை தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏற்படும் முக்கிய வேளாண் பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண, திட்டங்களை செயல்படுத்தவும், முன்னோடி ஆராய்ச்சி திட்ட செலவினங்களை பல்கலைக்கழக நிதிக்குழுவின் ஒப்புதலுடன் மேற்கொள்ளவும் இத்தொகை பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: