பாஜ நிர்வாகி கைது

சாத்தான்குளம்: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகை ரூ.1000, செப்.15ம் தேதி முதல் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குறித்து தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றிய பாஜ பொதுச்செயலாளர் ஜெயராஜேஷ் (எ) ராஜேஷ் (50), சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட திமுக பிரதிநிதி சரவணன் (50) சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பாஜ பொதுச் செயலாளர் ராஜேசை நேற்று கைது செய்தனர். பின்னர் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: