லண்டன்: லண்டன் ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட், சிகிச்சை பலனின்றி இறந்தார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு வெளியே ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட் (56) மயக்க நிலையில் விழுந்தார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பால் கிராண்டின் திடீர் மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.