ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. ஈரோடு மாநகராட்சி ஆணையரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியுடைய தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டாகும். முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெறுகிறது.