தென்சென்னை சிறுபான்மை நல உரிமை பிரிவு திமுக சார்பில் 1070 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன் வழங்கினர்

ஆலந்தூர்: தென்சென்னை மேற்கு மாவட்டம் சிறுபான்மை  நல உரிமைப்பிரிவு திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் 1070 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜாபர்கான்பேட்டை கெங்கையம்மன் கோயில் தெரு வில் நேற்று நடந்தது. விழாவிற்கு, சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு அமைப்பாளர் சைதை சாதிக் தலைமை வகித்தார். மண்டலக்குழு தலைவர் எம்.கிருஷ்ண மூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் எம்.தர், சைதை மா.அன்பரசன், அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களக்காடி எல்லப்பன் வரவேற்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு, முதலமைச்சரின் சாதனைகளை பாராட்டி பேசினர். பின்னர், 1070 பேருக்கு வேட்டி-சேலை, பெட்ஷீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் மூ.மனோகரன், பாலவாக்கம் சோமு, த.விஷ்வ நாதன் மற்றும் வேளச்சேரி மணிமாறன், பகுதி நிர்வாகிகள் வி.பி.ஜானகிராமன், சை.மு.சேகர், சுமதி தீனதயாளன், கமலநாதன், மா.ஏழுமலை, வரதன், பி.எஸ்.பிரகாஷ், த.சம்பத், ஆர்.ரமேஷ், கவிதா கவுதமன், ஆர்.அருணகிரி, விநாயகமூர்த்தி, நா.ராதாகிருஷ்ணன், எம்.பி.கோதண்டன், புகழ்வேந்தன், ஆர்.ரவி, மு.கதிரவன், வழக்கறிஞர் பரத்குமார், பி.எஸ்.பிரகாஷ், சு.முருகன், வி.சபரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: