ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

தேனி: ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. கடந்த 2011ம் ஆண்டில் பெரியகுளம் அருகேவுள்ள கும்பக்கரை சாலையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக தகவல் வெளியானது. தகவலின்பேரில் தனிப்படை போலிசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது தேனியில் இருந்து சென்ற கார் சிக்கியது. காரை சோதனையிட்டபோது ரூ.500 நோட்டுகள் கொண்ட ரூ.2 லட்சத்துக்கான கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக காரில் பயணம் செய்த சிவகங்கை செல்வம், திருப்பூர் கணேசன், கோவை சாமிக்கண்ணு, செல்வம், தேனி நவமணிகண்டன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு பெரியகுளம் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளநோட்டு அச்சிடுபவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: