பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

சென்னை: தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து, 2-வது நாளான இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம்தொடங்கியது. அப்போது, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

வேளாண்மைமையை குறிக்கும் வகையில் பச்சை துண்டு அணிந்திருந்தார். முன்னதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து சிறு தானியங்கள் அடங்கிய  கூடை அளித்து வாழ்த்து பெற்றார். மேலும், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில், வேளாண் பட்ஜெட்டை  வைத்து அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

Related Stories: