கோடை மழை: தமிழ்நாட்டில் நேற்று வரை 15% கூடுதலாக பெய்துள்ளது; சென்னையில் 1653% கூடுதலாக பெய்துள்ளது..!!

சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் நேற்று வரை கோடை மழை 15 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் மார்ச் 20 வரை வழக்கமாக 14.5 மி.மீ. கோடை மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 16.7 மி.மீ. பெய்துள்ளது.

சென்னையில் கோடை மழை 1653% கூடுதலாக பெய்துள்ளது:

சென்னையில் மார்ச் 1 முதல் 20ம் தேதி வரை கோடை மழை 1653 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வழக்கமாக 3.2 மி.மீ. மழை பெய்யும் நிலையில் தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 686 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 1 முதல் 20 வரை வழக்கமான 5 மி.மீ.க்கு பதில் தற்போது 39.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவு:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செங்குன்றம் - 5 செ.மீ., தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. சோழவரம், பொன்னேரியில் தலா 2 செ.மீ., திருத்தணி, பூண்டி, ஆவடியில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

புழலில் 5.1 செ.மீ. மழை பதிவு:

சென்னை அடுத்த புழலில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை 5.1 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மாதவரத்தில் 4.6 செ.மீ., விருதுநகரில் 2.4 செ.மீ., அருப்புக்கோட்டையில் 2.1 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. விருத்தாசலம் - 1.9 செ.மீ., பாம்பன் - 1.3 செ.மீ., வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் - 1.3 செ.மீ. மழை பெய்துள்ளது. எண்ணூர் - 1.5 செ.மீ., ராமநாதபுரத்தில் 1 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: