காய்கறி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

வளசரவாக்கம்:  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சா  கடத்தி வருவதாக அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று திருமங்கலம் காவல்நிலைய உதவி ஆணையர் வரதராஜன் மற்றும் அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியின் எண்ணை வைத்து தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த பதிவு எண் லாரி வந்தபோது, போலீசார் சுற்றி வளைத்து, அதில் இருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் ஆந்திரா மாநிலத்தை  சேர்ந்த பாண்டோ குமரபாபு(23) என்பதும், இவர் கடந்த இரண்டு மாதமாக ஆந்திராவில் இருந்து வரும் வாரியை வழிமடக்கி அதிகமாக பணம் தருவதாக டிரைவர் இடம் ஆசை வார்த்தை கூறி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கஞ்சாவை எடுத்து வந்து சென்னை முழுவதும் கஞ்சா சப்ளை செய்து வந்ததும்  தெரிய வந்தது. பின்னர் போலீசார் அந்த லாரியை சோதனை செய்த போது மூன்று மூட்டை கோணியில் ஒரு பார்சலில் இரண்டு கிலோ கஞ்சா என 40 பார்சலில் 80 கிலா கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. 80 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, பாண்டோகுமரபாபுவை கைது செய்து,  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: