ரூ.2000 கோடியில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், உலக வங்கி உதவியுடன் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘=தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்: பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும்,

கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’’ என்ற திட்டத்தை ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில், செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: