பெருமாள்பட்டில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு இரட்டைக்குளம் அருகே பசுமைக்குழு நண்பர்கள், அன்பு கருணை இல்லம் அறக்கட்டளை மற்றும் கிரீன் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் - மதுரவாயல் பசுமைக் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கிரீன் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் பசுமைக்குழு ஆலோசகர் ஏ.சுந்தரம் தலைமை தாங்கினார். பசுமைக் குழு நண்பர்கள் குழு தலைவர் ஆர்.டி.பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் பூந்தமல்லி சரக காவல்துறை உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை அனைவரும் கருத்தில் கொண்டு கட்டாயம் மரம் வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பி.சீனிவாசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் அன்பு கருணை இல்லம் அறக்கட்டளை நிறுவனர் ஜி.அன்புகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சி.பி.செந்தில்குமார், ஜெ.வெங்கடேஸ்வர ராவ், ஏ.மேத்யூ, பி.கோபிநாத், செந்தில்பாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: