விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, உடந்தையாக இருந்த முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். எஸ்பி ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சியான சென்னை தமிழ்நாடு அரசு காவலர் பயிற்சிக்கல்லூரி டிஐஜி ஆனிவிஜயா ஆஜரானார். அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த குறுக்கு விசாரணை நடந்தது. இதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
