எஸ்சி, எஸ்டியினருக்கான துணை திட்டத்தை உறுதி செய்ய சட்டம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் ரூ.100 கோடியில் கட்டப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தைஉறுதி செய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை ஏற்று, இத்துணை திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்.

Related Stories: