மொத்த வருவாய் ரூ.2,73,246 கோடி மொத்த செலவு ரூ.3,65,321 கோடி

சென்னை: தமிழ்நாட்டின் 2023-2024ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட விரவங்களின்படி, மாநிலத்தில் மொத்த வருவாய் ரூ.2,73,246 கோடி. மொத்த செலவு ரூ.3,65,321 கோடி. இதில் மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவுகள் சதவீதத்தில் வருமாறு: மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விவரம்: வணிக வரிகள் 73.3%, முத்திரைத் தாள்களும், பத்திரப்பதிவுகளும் 14.1%, மாநில ஆயத்தீர்வை 6.5%, வாகனங்கள் மீது வரிகள் 4.9%, பிற வரிகள் 1.2%.

மொத்த செலவினம் விவரம்: செயல்பாடுகளும் பராமரிப்புகளும் 5.3%, வட்டி செலுத்துதல்-18.0%, உதவித் தொகைகளும், மானியங்களும் 39.6%,, சம்பளங்கள் 25.1%, ஓய்வு ஊதியங்கள் மற்றும் ஓய்வு கால பலன்கள் 12.0%.

ஒரு ரூபாயில் வரவு செலவு (பைசாவில்)

* வரவு

கடன்களின் வசூல் 1

ஒன்றிய அரசின் மானியங்கள் 7

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 44

மாநிலத்தின் வரியில்லா வருவாய் 5

மத்திய வரிகளின் பங்கு 10

பொதுக்கடன் 33

* செலவு

செயல்பாடுகளும் பராமரிப்புகளும் 4

கடன் வழங்குதல் 3

உதவித் தொகை, மானியங்கள் 30

சம்பளங்கள் 19

வட்டி 13

கடன்களை திரும்ப செலுத்துதல் 11

மூலதனச் செலவு 11

ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் 9

* எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு கோடி

2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வி, தொழில், நகராட்சி, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வருமாறு:

* கூவம் அடையாறு மறுசீரமைப்பு ரூ.1,500 கோடி

* போக்குவரத்து துறை ரூ.8,056 கோடி

* சென்னை மெட்ரோ ரூ.10,000 கோடி

* கோவை மெட்ரோ ரூ.9,000 கோடி

* மதுரை மெட்ரோ ரூ.8,500 கோடி

* நெடுஞ்சாலைகள் துறை ரூ.19,495 கோடி

* பள்ளி மாணவர் இலவச பஸ் பயண திட்டம் ரூ.1,500 கோடி

* மகளிர் இலவச பஸ் பயணம் ரூ.2,800 கோடி

* நகராட்சி,குடிநீர் வழங்கல் ரூ.24,476 கோடி

* வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி ரூ.13,969 கோடி

* சிறு, குறு நடுத்தர தொழில்கள் ரூ.1,509 கோடி

* தொழில் துறை ரூ.3,268 கோடி

* அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம் ரூ.1,000 கோடி

* மின் திட்டங்கள்  ரூ.77,000 கோடி

* மின்சார துறை ரூ.14,063 ேகாடி

* மக்கள் நல்வாழ்வு துறை ரூ.18,661 கோடி

* பள்ளி கல்வி துறை ரூ.40,299 கோடி

* உயர் கல்வி துறை  ரூ.6,967 கோடி

* சமூக நலத்துறை ரூ.5,346 கோடி

* சென்னை வெள்ளத்தடுப்பு ரூ.320 கோடி

* ஆதிதிராவிடர் துறை ரூ.3,513 கோடி

* கூட்டுறவு, உணவு துறை ரூ.16,262 கோடி

* குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000

* உரிமைத்தொகை ரூ.7,000 கோடி

Related Stories: